
திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான குழுவினர் இன்று அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது மீனவர்களின் பக்க நியாயங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர், அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் சாதகமான முடிவினை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் திருகோணமலை மாவட்ட மீனவர்களுடன் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் வேண்டிக்கொண்டதுடன் அதில் தானும் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கிண்ணியா மீனவர் மகா சங்க தலைவர் ஏக்கூப் பாயிஸ், பிரதேச மீனவர் சங்க பிரதிநிதிகள் பைரூஸ், ரமீல்,றிபாஸ், லசந்த ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




