திருமலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தபகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய கனகசபை குகநாதன் என்பவரே இன்று காலை உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

வீட்டிலிருந்து மாடு பார்ப்பதற்காக சென்றபோது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை தாக்கியுள்ளது.

இதன்பின்னர், புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு அவரை கொண்டு சென்ற போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை! திலும் அமுனுகம

Leave a Reply