நெடுங்கேணி யுவதி சுட்டுப் படுகொலை: ஒருவர் கைது!

வவுனியா, நெடுங்கேணியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணி – சிவா நகர் பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டுக்கு வெளியில் வரும் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply