
கொழும்பு,ஒக் 19
மதுபான உற்பத்தியாளர்களினால், மதுபான விற்பனை நிலையங்கள் நடத்திச் செல்லப்படுவதன் ஊடாக, அரசாங்கத்திற்கு இல்லாது போகும் வரி வருமானம் தொடர்பிலான அறிக்கையொன்றை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, கலால்வரி ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, கலால்வரி ஆணையாளர் நாயகம் மற்றும் மதுபான அனுமதிப் பத்திரங்களின் உரிமையாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தியாளர்கள், வேறு வர்த்தக நாமத்தில், தமது உறவினர்கள் கீழ் மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபானசாலைகளை நடத்திச் செல்கின்றமை, இன்று இடம்பெற்ற கூட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த விடயத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு, கலால் வரி சட்டத்தில் திருத்தங்களை மே;றகொள்ள வேண்டுமாயின், எதிர்வரும் கலால்வரி திருத்தத்தின் போது, அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர், கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.




