<!–
நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்…
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 109 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சம்பா அரிசி தற்போது 162 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 48% அதிகமாகும்.
- கடந்த ஆண்டு 93 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 123 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- கடந்த ஆண்டு 183 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு தற்போது 259 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- கடந்த ஆண்டு 550 ரூபாயாக இருந்த ஒரு கிலோ உலர் மீன் தற்போது, 935 ரூபாயாக அதிகரித்துள்ளது.
- 2020 நவம்பரில் 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி தற்போது 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டை விட 400 கிராம் பால் பவுடர்கள் 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தக்காளி விலை 164%, வெண்டைக்காய் 188%, போஞ்சி 70%, கேரட் 70%ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று 1257 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






