கண்டிய நடனத்துக்கும் சபைக்கும் சம்பந்தமில்லை- யாழ். மாநகர முதல்வர் தெரிவிப்பு

யாழ். ஆரியகுளம் திறப்பு நிகழ்வுக்கு கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட்டமை, யாழ்.ஆரியகுளம் நாகவிகாராதிபதி அழைத்துவரப்பட்டமை ஆகிய சம்பவங்களுக்கும் யாழ்.மாநகரசபைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று, முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வடக்குமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,நிகழ்வுக்கு வரும்போது, நாகவிகாராதிபதியுடன் கண்டிய நடத்துடனேயே நிகழ்வுக்கு வந்திருந்தார்.

இது தொடர்பில் கேட்டபோதே, முதல்வர் மணிவண்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விருந்தினராக அளிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆரியகுளம் நாகவிகாரை விகாரதிபதியுடன் கண்டிய நடனத்துடன் நிகழ்வுக்கு வந்தார்.

ஆரியகுளம் திறப்பு விழாவில் நாகவிகாரை விகாரதிபதியின் பெயரோ கண்டிய நடன நிகழ்வு தொடர்பிலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply