முல்லை. வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானம்

முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

துயிலும் இல்ல பணி குழுவினரின் ஏற்பாட்டில் இந்தத் துப்புரவுப் பணி இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டளார்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply