
இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று நிபுணத்துவப் பிரிவின் ஆலோசகர், வைத்தியர் ஜூட் ஜயமஹா இதனை நேற்று (03)தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை தொற்றுடன் கண்டறியப்பட்ட குறித்த நபர் நவம்பர் முதலாம் திகதி டுபாயிலிருந்து நாடு திரும்பியவரார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

