5 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்தவர் அம்பாறையில் கைது !

அம்பாறை ஹிங்குரான வீதியிலுள்ள ஹோட்டலுக்கு அருகில் வைத்து விலையுயர்ந்த 5 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கஜமுத்துக்களை விற்பனை செய்யத் தயாராகவிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply