பல லட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

கொழும்பு,நவ 04

கடந்த காலங்களில் ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, கனடா, அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 13 சந்தேகத்திற்கிடமான பொதிகள் இலங்கை சுங்கத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள், இலங்கை தபால் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த பொதிகள் தொடர்பாக தபால் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் தனிப்பட்ட பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதிகளில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குஷ் ரக போதைப்பொருள் 921 கிராம், ஐஸ் ரக போதைப்பொருள் 106 கிராம், Organic Hemp Oil, Methamphetamine, 5272 போதை மாத்திரைகள், போதை முத்திரை 425, மென்டி ரக போதைப்பொருள் 2 கிராம் மற்றும் ஹேஷஷ் ரக போதைப்பொருள் 4 கிராம் காணப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பெறுமதி 73,065,000/- ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொருட்கள் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply