
‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் முருங்கன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நானாட்டான் பிரதேச சபை தவிசாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள்,வன்னிமண் அறக்கட்டளை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

