சட்டவிரோத முறையில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்

கொழும்பு,நவ 05

இன்று அதிகாலை நுரைச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாம்புரி கடற்கரை பகுதியில் லொறி வண்டியொன்றில் சந்தேகிடமான முறையில் பொருட்களை ஏற்றுவது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய நுரைச்சோலை பொலிஸ் அதிகாரிகள் குழுவால் சுற்றிவளைப்பு நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பின்போது, சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலை தொகுதியுடன் கூடிய லொரியொன்று கைப்பற்றப்பட்டது,

மேலும் சுற்றிவலைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் பயணித்த பொலிஸ் வண்டியை பார்த்தவுடன் மேற்குறிப்பிட்ட லொறி வண்டியை வேளாங்ககனி கிளைப்பாதையில் நிறுத்திவிட்டு குறித்த வண்டியில் பயணித்த
ஓட்டுனரும்,அவரின் உதவியாளரும் தப்பி சென்றதாக தெரியவருகிறது.

அதன் பின்னர் குறித்த லொறியினை பரிசோதித்தப்போது, அதில் இரகசியமான முறையில்பதுக்கி வைக்கப்பட்ட 23 காட்போட் பெட்டிகளும் 09 கறுப்புநிற பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடியிலைகளின் நிறை 774 கிலோகிராம் ஆகும்.

Leave a Reply