இந்தோனேசியாவில் இசைக்கச்சேரியின் போது மயங்கிவிழுந்த 30 பேர்

இந்தோனேசியா,நவ 05

இந்தோனேசியாவில் NCT 127 எனும் தென் கொரிய K-pop இசைக்குழுவின் இசைக்கச்சேரியில் 30 பேர் மயங்கிவிழுந்ததாகக் பொலிஸ் தெரிவித்துள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே அந்தக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்றிரவு (4) கச்சேரி தொடங்கிய இரண்டு மணிநேரத்தில் கூட்டம் மெல்ல மெல்ல மேடைக்கு அருகே செல்லத் தொடங்கியது.

அப்போது நெரிசல் ஏற்படவே, 30 பேர் மயங்கி விழுந்தனர்.

ஏற்பட்டாளர்கள் அபாயத்தை உணர்ந்து உடனடியாகக் கச்சேரியை இரத்து செய்தனர்.
மயங்கி விழுந்தோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கச்சேரி தொடங்குவதற்கு முன் நிகழ்ச்சியைப் படைத்தவர்கள் ரசிகர்களுக்கு சில நினைவுப்பொருட்களை இலவசமாகக் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
அதை வாங்கச் சிலர் முண்டியடித்துக்கொண்டு தடுப்பு வேலிகளைத் தள்ளிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

இன்று கச்சேரியின் இரண்டாம் நாளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலவசப் பொருள்கள் எதையும் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
சென்ற மாதம் இந்தோனேசியாவில் காற்பந்து விளையாட்டரங்கத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 சிறுவர்கள் உட்பட 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
சென்ற வாரம் தென் கொரியாவின் ஹலொவீன் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியால் அதிகாரிகள் விழிப்பு நிலையில் உள்ளனர்.

Leave a Reply