ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி!

<!–

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி! – Athavan News

மாந்தை மேற்கு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுகுழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சிரமதானம் முடியும் நிலையில் துயிலும் இல்ல பகுதிக்கு வந்த அடம்பன் பொலிஸார், சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்பாட்டுக்குழுவினரை அச்சுறுத்தியுள்ளனர்.


Leave a Reply