நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நாடாளுமன்ற அறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




