கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய திருடன்..!மக்களால் நையப்புடைப்பு

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருட வந்த ஒருவரை, பொது மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் யாழில் இன்று இடம்பெறுள்ளது.

இச் சம்பவம், யாழ்.கைலாசபிள்ளையார் கோவிலின் அருகில் உள்ள சொக்கன் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனது பையில் இரு கத்திகளையும் வைத்து கொண்டு நடமாடும் குறித்த திருடன், சந்தர்ப்பம் வரும் வேளையில் கத்தியைக் காட்டி மிரட்டி திருடி வந்துள்ளார்.

இன்று (04) காலை யாழ். மாம்பழச் சந்தியில் உள்ள புத்தக கடையொன்றினில் நுழைந்து அங்கு நின்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து திருட முற்பட்டுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கடைக்குள் ஓடினார்கள். அதனைப் பார்த்த திருடன் தப்பியோடியுள்ளார்.

இதேபோல் சொக்கன் உணவகத்துக்குள்ளும் நுழைந்து திருட முற்பட்ட போது, மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த திருடன் எந்த நேரமும் அழுக்கான உடையுடன் யாழ்.நகர் வீதிகளில் நடந்து செல்வதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டது போல் உலாவுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply