திருமலை – நிலாவெளி கடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் உயிரிழப்பு!

திருகோணமலை, நிலாவெளி கடலில் இன்று (4) குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் .

இறக்கக் கண்டி பகுதியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினமும் திருகோணமலையில் இரண்டு சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply