வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தனது வீட்டில் இருந்து வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக காலையில் இருவர் சென்றதாகவும், திடீரென அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் தனக்கு இயலாமல் இருக்கின்றது எனக் கூறி குளத்தில் இருந்து வெளியே வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
மற்றைய நபர் மீன் பிடித்து முடிந்ததும் வீடு நோக்கி சென்ற போது குளத்தின் அருகில் இருந்த ஒழுங்கை ஒன்றில், இயலாது இருப்பதாக கூறிவிட்டு சென்ற நபர் மரணித்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் வவுனியா, கல்நாட்டினகுளம், மதுரா நகர் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜெயகுலராசா என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில், ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நிபந்தனைகளின் கீழ் நாளை முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானம்!





