யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது, உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளால் உள்ளூராட்சி மன்றங்களில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள அரசியல் நிலைமை மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.
நல்லாட்சி அரசாங்கம் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திவேலைத்திட்டங்கள் போன்று இந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், காணி சுவிகரிப்பு நடவடிக்கை தற்போதைய அரசாங்கத்தில் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடியதோடு தனது ஆதரவாளரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.








