மானிப்பாயில் மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இன்று மாலை, மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியாள்ளது.

குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து கல்லுண்டாய் வீதியூடாக சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி கல்லுண்டாய் வைரவர் கோவிலடியில் திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் சம்பிக்க சந்திப்பு!

Leave a Reply