
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் , ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது அங்கிருந்த அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த தாக்குதல் முயற்சியை தடுத்து நிறுத்தியதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது படைக்கல சேவிதரும் நாடாளுமன்ற பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




