பாகிஸ்தானில் உயிரிழந்த இலங்கையர் குறித்து ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் பொது மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply