பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நாமல்!

பாகிஸ்தானில் எரித்துக் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இல்லத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று மாலை சென்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

கணேமுல்லயில் வசிக்கும் பிரியந்தவின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்கள், பாகிஸ்தான் தூதுவர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சடலத்தை நாட்டுக்கு கொண்டு செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும், கொலை தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்! ஜனாதிபதிக்கு இம்ரான்கான் உறுதி

Leave a Reply