யாழ். உரும்பிராய் விபத்தில் ஒருவர் பலி; வானத்தை நோக்கி துப்பாக்கியை பிரயோகித்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் _ கைதடி, உரும்பிராய் பகுதியில் இன்று இரவு வேன் மற்றும் துவிச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த , உரும்பிராய் அன்னங்கை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குணசிங்கம் சுதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, அங்கு கூடிய மக்கள் , மல்லாகத்தை சேர்ந்த வேன் சாரதியை பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. இதுதொடர்பில் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது பெருமளவானோர் அங்கு கூடி அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர்.

அதனால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்திய சாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததுடன் , வாகன சாரதியை கைது செய்து, வாகனத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply