ஈழத் தமிர்களின் விடுதலை பாரத தேசத்தின் அரவணைப்பிலேயே தங்கியுள்ளது! தமிழ்நாட்டில் சிறிதரன் எம்.பி

ஈழத்தமிழர்களின் விடிதலை, நிம்மதியான சுயாட்சி என்பன பாரத தேசத்தின் அரவணைப்பிலும், நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வன்னியரசின் தந்தை இரத்தினசாமியின் நினைவு நாளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், பாரத தேசத்தின் நம்பிக்கையையும், அழுத்தத்தையும் தமிழ் நாட்டிலே பிறந்த ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்ற கடமையிலேயே ஈழத்து மண்ணின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.

நாங்கள் எப்போதுமே இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியாவின் பாதுகாவலர்களாக இருக்கவே விரும்புகின்றோம்.

அந்திய சக்திகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றால் அல்லது இந்தியாவிற்கு கலங்கம் ஏற்படுத்த முனைந்தால் அதனை பாதுகாக்கின்ற சக்தியாக எப்போதும் ஈழத் தமிழர்கள் இருப்பார்கள். அதனால்தான் எங்கள் இருப்பும் உங்கள் பாதுகாப்பும் பிண்ணிப் பிணைந்த ஒன்றாகவுள்ளது.

நாங்கள் இன்று நிலம் அற்றவர்களாகவும், மொழி அற்றவர்களாகவும் இருக்கின்றோம். அதாவது எமது மொழி பறிக்கப்படுகின்றது. எமது நிலம் பறிக்கப்படுகின்றது.

நாம் வாழ்ந்த வரலாறு பறிக்கப்படுகின்றது. அதற்கும் மேலாக வாழும் உரிமையைக்கூட இழந்துகொண்டு இருக்கின்றோம். இவ்வளவு நெருக்கடிக்கும் மத்தியிலேயே எமது மக்கள் வாழ்கின்றனர் என்றார்.

குறிஞ்சாக்கேணி படகு விபத்து உயிரிழப்பு எட்டாக உயர்வு!

Leave a Reply