முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் அவர் ஈடுப்பட்டார்.
இதன்போது, மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக பசளை, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் கருத்து முன்வைத்தனர்.
அதற்கு பதிலளித்த அவர், குறித்த பிரச்சினைகள் தொட்பில் எழுத்து மூலமாக தருமாறும், அதற்கு பொருத்தமானவர்களிற்கு தகவலை வழங்கி தீர்வு பெற்று தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட அமைப்பாளர் சீலனின் வேண்டுகோளுக்கு அமைவாக சிவபுரம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி மக்களின் பிரச்சிகைளைகளையும் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது, வெள்ள அனர்த்தம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள், அவரிடம் முன்வைத்தனர்.



ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களையே அறிக்கையிட வேண்டும்! ஞானசார தேரர்






