கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி!

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது, அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மர்மப்பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றால் வெட்டியபோது, மர்மப்பொருள் வெடித்ததில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

25 வயதுடைய சிவலிங்கம் யுவராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply