நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,461 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 566,936 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,326 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் மின்துண்டிப்பு! மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு






