ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து

நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் சபாநாயகரிடம் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும்.

அதற்கான உத்தரவாதத்தை அவர் இன்னும் வழங்கவில்லை. சபாநாயகர் நடுநிலையாக செயற்பட வேண்டும். குறித்த விவகாரத்தில் தற்போதைய சபாநாயகர் மௌனம் காக்கின்றார்.

மனுச நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சபைக்குள் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அரச வன்முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றார்.

சபாநாயகரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது நாடாளுமன்றம்! பிரதம கொறடா குற்றச்சாட்டு

Leave a Reply