கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம், ” விபத்தில் ஒருவர் பலி ,இருவர் படுகாயம்”!

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் கவிழ்ந்ததில்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளியம் பொக்கணையிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் வட்டக்கச்சிப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் டிப்பரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புளியம் பொக்கணைப் பகுதியைச் சேர்ந்த ரவிகரன் டிலக்சன் (வயது-22) என்பவராவார்.
சடலம் கிளிநொச்சி மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply