எல்.பி.எல்.: 5 ஆவது போட்டியில் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கண்டி வரியர்ஸ் – காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி வரியர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துக் களமிங்கியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், இரண்டு அணிகளிலும் கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்களில் தலா இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் இசுரு உதான, புலின தரங்க இருவருக்கும் பதிலாக தனஞ்சய லக்ஷான், சுமிந்த லக்ஷான் ஆகியோரும், கண்டி வரியர்ஸ் அணியில் டெவொன் தோமஸ், அசேல குணரத்ன இருவருக்கும் மாற்றாக அஹமட் செஷாட், திலகரட்ன சம்பத் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply