இலங்கைக்கு விதித்த தடையை நீக்கியது ஐக்கிய அரபு இராச்சியம்

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை ஐக்கிய அரபு இராச்சியம் தளர்த்தியுள்ளது.

டெல்டா வைரஸ் திரிபு தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக நேபாளம், இலங்கை, உகாண்டா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளுடன், குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானத்திற்கு நாளை (05) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

எனினும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பயணிகள் நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் 72 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான பெறுபேற்று ஆவணங்கள் என்பனவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply