கிண்ணியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா நகர சபை ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களே இவ்வாறு சுகயீனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள உயர்வு, ஓய்வூதிய வயதெல்லை 65 வயதை அனுமதிக்காமை, போட்டிப் பரீட்சை மூலம் பதவி உயர்வு வழங்கல் முதலான கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply