‘அல்லாஹூ அக்பர்’ என கூறிக்கொண்டே கொளுத்தினோம்! பிரதான சந்தேக நபரின் பதறவைக்கும் வாக்குமூலம்..!

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான தலைவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு தீ வைத்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் ஆட்களை ஒன்றுதிரட்டி முகாமையாளரின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி ‘அல்லாஹூ அக்பர்’ என்று கூறிக்கொண்டே கொளுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர் ஹமீட் மீரியும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply