குற்றபுலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன், தான் கைது செய்தமைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
நாடாளுமன்றில் இன்று (04) உரையாற்றிய அவர், “நான் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் விசாரணைகள் நடத்தப்பட்டன. தற்போது 102 நாட்கள் ஆகின்றன.
இதுவரை எந்த விசாரணைகளும் நடைபெறவில்லை. அமைச்சராக செயற்பட்ட போது அமைச்சின் மேலதிக செயலாளருடன் தொலைபேசியில் உரையாடியதற்காக கைது செய்யப்படுவதாக கூறுகின்றனர். இது என்ன நியாயம்” என்றும் ரிஷாட் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இது குறித்து அவர் சபையில் முறையிட்டார்.