மாணிக்கக்கல் சுரங்க குழிக்குள் சிக்கி இளைஞன் பலி! மலையகத்தில் சோகம்!!

பொகவந்தலாவ, லச்சுமி தோட்டம் மேற்பிரிவில் தேயிலை தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுரங்க குளிக்கும் மண்மேடு சரிந்து விழுந்ததில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.

டின்சின் பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் உபேந்திரன் என்ற இளைஞரே நேற்று மாலை இவ்வாறு பலியாகி உள்ளார்.

மேற்படி தோட்டத்தில் ரெண்டு 2 ஏ தேயிலை மலையில் சட்டவிரோதமான மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவர் குறித்த குழியை தோண்டிக் கொண்டிருந்த பொழுது அக்ககுழி மேல் மண்மேடு சரிந்து விழுந்து அதிலிருந்து இருவர் தப்பிவிட்டன,ர் மற்றும் ஒருவர் மண்ணுக்குள் புதைந்து மரணித்தார்.

சம்பவ இடத்துக்கு ஹட்டன் தடவியல் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதிமன்றம் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் போகவந்தலாக மாவட்ட வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply