கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று இரவு உயிரிழந்துள்ளது.
கம்பஹா – பஹல்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையுடைய வயிற்றில் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், குழந்தைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும், நள்ளிரவு 12 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.