இலங்கைக்கு தரையிறங்கவுள்ள புதிய விமானங்கள்.! அமைச்சரின் விசேட அறிவிப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை மறுசீரமைப்பதற்காக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 11 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறுவனமொன்று வீழ்ச்சியடைந்ததன் பின்னர் அதனை மறுசீரமைக்க முடியாது.

இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள விமானங்களின் வரி காலம் நிறைவடைந்தால், அதன் பின்னர் மறுசீரமைக்க முடியாது.

எனவே நிறுவனமொன்றை நிர்வகித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கமையவே புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார். 

Leave a Reply