லைக்காவின் ஜஃப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தியது கண்டி ஃபல்கூன்ஸ் அணி!

லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் லைக்காவின் ஜஃப்னா கிங்ஸ் அணியை 10 ஓட்டங்களினால் வீழ்த்தி கண்டி ஃபல்கூன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி ஃபல்கூன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கண்டி ஃபல்கூன்ஸ் அணி சார்பாக பேபியன் அலன் 47 ஓட்டங்களையும் அண்ட்ரே பிளெட்சர் 35 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

இதனை அடுத்து பதிலுக்கு துதிடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணி சார்பாக சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

Leave a Reply