'தென் யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு விழா!

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய “தென் யாழ்ப்பாணம்” நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச  செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு  இடம்பெற்றது. 

இந் நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையேற்று நடாத்த, பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயளாளர் திரு.இ. வரதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு ‘தென் யாழ்ப்பாணம்’ நூலை வெளியிட்டு வைத்தார்

இந் நிகழ்வில் எழுத்தாளர்கள், கலைத்துறை சார் ஈடுபாடுடையோர், பிரதேச செயலக அலுவலகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply