சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு,விழிப்புணர்வு நிகழ்வொன்று நிகழ்வு திருகோணமலை – செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் மாலை இடம்பெற்றது.
இதனை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
சர்வதேச மனித உரிமை தினத்தையொட்டி இளைஞர்களுக்கிடையே போதைவஷ்து பாவனையை ஒழித்து ஆரோக்கியமிக்க எதிர்கால சமூதாயத்தை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மனித உரிமையை வலியுறுத்திய பேரணியொன்றும் இடம்பெற்றது.
இதில் மனித உரிமை ,பெண்கள் உரிமை தொர்பான விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் நடனம், நாடகம், உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.
அத்துடன் நிகழ்வுகளில் பங்குபற்றியோருக்கான பரிசில்கள் ,சான்றிதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதிகளாக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பீ.தனேஸ்வரன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.கனி, உப்புவெளி பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.