நுவரெலியாவில் உணவகத்தில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து!!

நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து, ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியாபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்தபோது, அங்கிருந்த சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளதாகவும், குறித்த பிரதேச மக்கள்,பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தீயினால் சமைத்த உணவுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், ஹோட்டலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply