நுவரெலியா மாவட்டத்தில் வளப்பனை பிரதேசத்திற்குட்பட்ட தெறிப்பெய போலீஸ் பிரிவு மற்றும் உடப்புசலா போலீஸ் பிரிவு ஆகிய 8 கிராமங்களுக்கு கடந்த 8ம் திகதி காலை முதல் இதுவரை மின்சாரம் இல்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் திகதி வீசிய மினி சூறாவளியினால் தெறிப்பெய போலீஸ் உட்பட்ட நெதிலந்த,பாலகம,உடகமே,திக்கல,பஸ்பனாவெல ஆகிய கிராமங்களில் பாரிய மரங்கள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
அதேபோல் உடப்புசலாவ போலீஸ் பிரதேசத்தில் மீப்பானவு,எம்புலமபா,நுககொட ஆகிய கிராம பகுதிகளிலும் மின்சார கம்பங்களின் மீது மரங்கள் விழுந்து மின்சாரம் தடைபட்டுள்ளது.
இந்த நிலையானது கடந்த எட்டு நாட்களாக உள்ளது. மின்சார கம்பங்கள் சீர் செய்து வழமையான மின்சாரம் வழங்க இலங்கை மின்சார சபை இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் இந்த குறித்த நிலையினால் தங்களுக்கு அன்றாட வேலையை செய்வதில் மிகுந்த சிக்கல் நிலவுவதாகவும், எதிர்வரும் அரசாங்க பரீட்சைகளில் தோற்ற இருக்கும் மாணவர்கள் அதிகப்படியானோர் குறித்த பிரதேசத்தில் வாழ்வதால் அவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.