"பாலியல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி" முக்கிய இடத்தில் துண்டுப்பிரசுரம்!

வவுனியாவில் பாதுகாப்பான பயணத்திற்கு எனும் தொனிப்பொருளில் பாலியல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைத்தல் எனும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தேசிய பெண்கள் குழு என்பன இணைந்து முன்னெடுத்த இச் செயற்றிட்டம் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (16.12.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த ஸ்டிக்கரில் பாதுகாப்பான பயணத்திற்கு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் , உங்களுக்கு வன்முறை  இடம்பெற்றால் அமைதியாக இருக்க வேண்டாம் எதிர்த்து போராடுங்கள் , வன்முறையை பார்க்கும் போது அதனை தடுக்க முன்வாருங்கள் , இது சட்டரீதியான தண்டனைக்குரிய குற்றமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவசர தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததுடன் பேரூந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply