யாழில் பொலிஸார் மீது கல் தாக்குதல் – பலர் தப்பி ஓட்டம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சுழிபுரம் பகுதியில் கசிப்பு விற்பனை இடம் பெறுவதாக கூறப்பட்ட இடத்தை பொலிஸார்  முற்றுகையிட நுழைந்தபோது  தாக்குதல் நடாத்தபட்டுள்ளது.

  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சுழிபுரம் பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுகின்றது என பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.  இதனையடுத்து    4 பொலிஸார்  சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் போது  கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கத்தியால் வெட்டுவதற்கு  முயற்சித்துள்ளனர். இதன் பின்னர் மேலும் கூடுதலான பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

பொலிஸார்  மீது சந்தேக நபர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளனர்.அவர்களைத்  தீவிரமாக பொலிஸார்  தேடி வருகின்றனர்.

Leave a Reply