கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை -வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டினுடைய காலநிலையானது இன்னும் சீராகாத நிலையில், கடற்தொழிலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை கடற்தொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

வடகிழக்கு, தென்மேற்கு மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதனத்துடன் செயல்படுமாறு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றின் வேகம் அதிகரிப்பதுடன், மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பல பகுதிகளில் அடிக்கடி பலத்த மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply