காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவெம்பா உற்வசம் வழமை போன்று சிறப்பாக நடத்தப்படவேண்டும் எனக் கோரி நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்;
ஈழத்துச் சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலில் திருவெம்பாவை உற்சவத்தை நடத்தாது பாலஸ்தாபனம் செய்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.
அதனைக் கண்டித்து ஆலய உபயகாரர்களால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டதையடுத்து பாலஸ்தாபனம் செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்று இடைக்கால தடையுத்தரவை விதித்தது.
எனினும் திருவெம்பா உற்சவத்தை கொரோனாத் தொற்றுக் காலத்தில் நடத்தியமை போன்று காலை 5 மணி தொடக்கம் 7 மணிவரை நடத்த ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைநகர் வாழ் மக்களால் நாளை ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது- என்றனர்.