வவுனியாவில் வீதியை கடக்க முயன்ற இளைஞரை மோதித்தள்ளிய பிக்கப்!

வவுனியாவில் வீதியினை கடக்க முற்பட்ட இளைஞனை பிக்கப் ரக வாகனம் மோதித்தள்ளியதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக  (16.12.2022) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாதசாரிகள் கடவையற்ற பகுதியில் இளைஞர் ஒருவர் வீதியினை கடக்க முயன்றுள்ளார். இதன் போது எதிர்த்திசையில் வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை என பெயர்பலகையுடைய பிக்கப் ரக வாகனம் வீதியினை கடக்க முயன்ற இளைஞனை மோதித்தள்ளியது.

இவ்விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

Leave a Reply