நாளை 18ம் திகதி காலை 8.30 மணிக்கு திருகோணமலை – முற்றவெளி மைதானத்துக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை.
*பயங்கரவாதச் தடைச் சட்டதை நீக்கு.!
*இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாக்களை நிறுத்து.!
* திட்டமிட்ட காணி அபகரிப்புக்களை நிறுத்து.!
*திருகோணமலையின் தமிழர்களின் புனிதப் பிரதேசங்கள் மேலான திட்டமிட்ட அழிப்புகளை உடனடியாக நிறுத்து.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.
அனைத்து அரசியல் பேதங்களையும் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் களமிறங்கும் ஒரு போராட்டமாக இது அமையவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
திருகோணமலையில் நீண்டகாலமாக அரசியல் செயற்பாட்டுகளின் முன் நிற்கும் உழைக்கும் அனைவரும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுகின்றமை குறிப்பிடத்தக்கது.