நிறுவனங்களை தனியாருக்கும், வெளிநாட்டுக்கும் விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கின்றது – திஸ்ஸ விதாரண!

எதிர்வருகின்ற தேர்தலில் யாழ்ப்பாண பிரதேசத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை சாவி சின்னத்தில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்து எங்கள் போராட்டத்தினை அரசாங்கத்திற்கு வலுவாக வழங்குவதடன் கட்சியினை பலப்படுத்தி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் நின்று போராடுவோம் எனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

நாட்டின் சமூகம், பொருளாதாரம் ஆகியன உக்கிரமடைந்திருக்கின்றன.கடந்த காலங்களில் டொலர் உயர்வடைந்து  எண்ணெய்,சிலிண்டர் போன்றவற்றுக்கு வீதியில் வரிசையில் 

 நின்றுகொண்டிருந்தோம்.மக்கள் மிகவும் மோசமான நிலையினை அடைந்திருந்தார்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிவாய்ப்புக்களை இழந்திருக்கின்ற சூழ்நிலையிலும் கூட இந்த அரசாங்கம் ,இலாபம் அடைந்து வரும் நிறுவனங்களையும் ,சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது.இதனால் நாட்டிற்கு பொருளாதார பின்னடைவு ஏற்படும்.

இதனால், நாட்டின் இளைஞர்,யுவதிகள் வேலைவாய்ப்பினை இழந்து வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.இந்த நிலைமை என்ன என்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது. லங்கா சமசமாஜக் கட்சித்தலைவர் என்.எம் பெரேரா 1975 ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருக்கும் போது இந்த நாட்டின் வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்தார்.ஒரு வீதத்தில் இருந்த டொலரினை உயர்த்தி செலவதற்கான முயற்சியினை செய்தார்.

பல பொருட்களை இறக்குமதிக்கு தடை செய்து முக்கிய பொருட்களை இறக்குமதி செய்து கரை சேர்த்திருந்தார்.நாட்டின் பொருளாதாரத்தையும்,டொலரையும் உயர்த்துவற்கு ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால் தற்போதைய அரசாங்கம் பல பொருட்களை தடை செய்தது .காலப்போக்கில் ரணில்  இறக்குமதி செய்வதற்கு  தடைகளை நீக்கி எல்லாப்பொருட்களும் நாட்டிற்குள் உள்வாங்கப்படுகிறது.

இதனால் டொலர்  வீதம் குறைகிறது .இங்கிருக்கின்ற தேயிலை தொழிலாளிகள்,விவசாயிகள் ஆகியோரின்  உற்பத்திகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை ஏற்பட்டதனால்  அவர்களுக்கு வருமானம் இல்லை.அவர்கள் கடன் வாங்கி தொழில் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது ஆனால் இந்த அரசாங்கம் 30 வீத வட்டி வழங்குகிறது,இதனை 15 வீத வட்டியாக வழங்க வேண்டும் என்பது எமது யோசனையாக முன் வைக்கிறோம்.

அடுத்து விவசாயிகளுக்குகாக கூட்டுறவு சங்க முறையினை உருவாக்கி இதன் மூலமாக வாடிக்கையாளருக்கு உரிய முறையில் போக்குவரத்து செலவினை மட்டும் பயன்படுத்தி அவர்கின் பொருட்களை பெற்றுக்கொண்டு குறைந்த விலையில் அந்த உணவுப்பொருட்களை  கொண்டு சேர்க்க வேண்டும் என்ற யோசனையையும் முன்வைக்கிறோம்.

எதை நாங்கள் முன்வாய்த்தாலும் கூட இந்த அரசாங்கம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல இருந்து கொண்டிருக்கிறார்கள் ,தனியான போக்கில் செய்துகொண்டிருக்கிறார்கள்.இந்த நாட்டின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது,இதனால் நான் மிகவும் வேதனையடைகிறேன்.இதனால் எதிர்வரும் தேர்தலில் யாழ்ப்பாண பிரதேசத்தில் லங்கா சமசமாஜக் கடசியின் சார்பாக வேற்பாளர்களை சாவி சின்னத்தில் போட்டியிட செய்து அவர்களை வெற்றி பெற செய்து எங்கள் போராட்டத்தினை அரசாங்கத்திற்கு வலுவாக வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அன்பான மக்களே ஜாதி,பேதம் இல்லாமல் தமிழ்,முஸ்லீம்,சிங்களம் என்று இல்லாமல் இந்த நாட்டின் ஒரே இனமாக எங்களுக்கு வாக்களித்து  லங்கா சமசமாஜக் கடசியினை பலப்படுத்தி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் நின்று போராடுவோம் என கூறிக்கொள்கிறோம்.

Leave a Reply